சுவிஸ் Chur இல் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை விட்டுச்சென்ற நபர்.!! குடிபோதையில் 42 வயது ஓட்டுநர் ஒருவர் Chur உள்ள Loëstrasse இல் இருந்து Cadonaustrasse திசையில் ஓட்டினார். பாதசாரி கடவையில், சாலையின் வலது புறத்தில் பாதசாரிகள் கடப்பதற்கான பதாகை மீது மோதினார்.
சேதத்தை பொருட்படுத்தாமல், டிரைவர் அங்கிருந்து புறப்பட்டு, சேதமடைந்த வாகனத்தை விபத்து நடந்த இடத்தில் நடந்த இடத்திலையே விட்டுச்சென்றுள்ளார். பின்னர் Chur நகர போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டு வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கிராவுண்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் சார்பில், விபத்தை ஏற்படுத்தியவரின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டு, அவரிடமிருந்து ஓட்டுனர் உரிமம் எடுக்கப்பட்டது.
வாகனம் மற்றும் தகவல் சமிக்ஞைக்கு சொத்து சேதம் ஏற்பட்டிருப்பதால் விபத்தின் போதான சொத்து இழப்பு மதிப்பு இன்னும் போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.