திங்களன்று, சூரிச் விமான நிலையத்திலிருந்து இத்தாலிய துறைமுக நகரமான பிரிண்டிசியை நோக்கி புறப்பட்ட விமானம் தனது பயணத்தை தொடரமுடியாமல் மீண்டும் சூரிச் விமானநிலையத்துக்கு திரும்பியுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி சுவான்சிக் மினுட்டன் இணையத்தளம் குறிப்பிடுகையில் இதற்கு காரணம் விமானத்தின் கேபினில் ஏற்பட்ட அசாதாரண வாசனை என தெரியவந்துள்ளது.

இந்த தரையிறக்கம் மதியம் 1 மணி 50 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த விமானத்தில் 180 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த பயணிகள் ஜெனீவா வழியாக மற்றொரு விமானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கம் போல், விமான நிறுவனம் கூடுதல் சேவைகளை பயணிகளுக்கு வழங்குகிறது. இதில் ஹோட்டல் தங்குமிடம் மற்றும் உணவு போன்ற விடயங்கள் அடங்கும்.
Source:- Zuritoday