சுவிஸ் மக்கள் திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்களா.? ஆய்வில் வெளியான தகவல்!! சுவிஸ் மக்கள் ஐரோப்பாவில் ‘மிகவும் திருப்தியடைந்தவர்கள்’ என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒப்பீட்டில், சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை திருப்தி அனைத்து நாடுகளை விடவும் மிக உயர்ந்தது என சொல்லப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் கடந்த செவ்வாயன்று வெளியிட்ட ஆய்வில் இருந்து இது வெளிப்படுகிறது.
மேலும், ‘ஐரோப்பிய ஒப்பீட்டில் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் சுவிட்சர்லாந்தில் உயர்வாகவே இருப்பதாகவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், சுவிட்சர்லாந்தில் அனைத்தும் திருப்பதியாக இருக்கிறது என்று கூறமுடியாது. குறிப்பாக, 10 பேரில் ஒருவருக்கு தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் இருப்பதாகவும், 4.9 சதவிகித மக்கள் நிதி காரணங்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கைவிட வேண்டும் என நினைப்பதாகவும் குறித்த ஆய்வு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.