சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி இரண்டு சறுக்கு வீரர்கள் பலி.!!தென்கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள க்ளோஸ்டர்ஸ் ரிசார்ட்டுக்கு அருகே பனிச்சரிவில் இரண்டு சறுக்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்ததாக கிராபுண்டன் பிராந்திய போலீசார் தெரிவித்தனர்.
செங்குத்தான சாய்வு கொண்ட சரிவில் சென்றுகொண்டிருக்கும்போதே அவர்கள் பல பனிச்சரிவுகள் ஏற்பட்டு பாறை நிலப்பரப்பில் சுமார் 200 மீட்டர் கீழே இழுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
‘இதன் விளைவாக, பெர்ன் மாகாணத்தில் வசித்த 54 வயது மற்றும் அவரது 57 வயது தோழர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.’
கிராபுண்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் கன்டோனல் காவல்துறையுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்துக்கு முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவுகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 142 பனிச்சரிவு தொடர்பான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் 188 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்திலும் ஆறு பனிச்சறுக்கு வீரர்கள் காணாமல் போயிருந்தனர். 21 முதல் 58 வயதுக்குட்பட்ட இந்தக் குழுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். இச்சம்பவத்தில் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டு, ஆறாவது நபரைத் தேடும் பணி இறுதியில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.