சுவிஸ் சாக்லேட்டின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு 2023 ஆம் ஆண்டில், உலகின் கொக்கோ உற்பத்தியில் முக்கால் பங்கு நடைபெறும் மேற்கு ஆபிரிக்காவில் பயிர் விளைச்சலைச் சேதப்படுத்திய மோசமான வானிலை காரணமாக, கோகோ விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுஇ சுவிஸ் சாக்லேட் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கொக்கோ விலைகள் அதிரித்து செல்லும் போக்கு காணப்படுவதால் சுவிஸ் சாக்லேட் உற்பத்திகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.

இதன் விளைவாகஇ சுவிஸ் சாக்லேட்டின் விலை மேலும் அதிகரிக்கும் என சுவிட்சர்லாந்தின் லிண்ட் சாக்லேட் நிறுவத்தின் இயக்குனர் மார்கோ பீட்டர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் கருத்து தெரிவித்து அவர் ‘விலை உயர்வு எங்களை பெரிதும் கவலையடையச் செய்கிறது’ எனினும் ‘உற்பத்தி செலவைக் குறைப்பதன் மூலம் இதை சரிசெய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சாத்தியமாகும் என தெரிவித்தார்.