சுவிஸ் Neuchâtel இல் உள்ள கடிகார உற்பத்தியாளரான Jean Singer et Cie இல் உள்ள நடைமுறைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பு சுவிட்சர்லாந்தில் பலரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது.
அங்கு பணியாளர்கள் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது (Stamble) ஷ்ட்டேம்பிள் அடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டின் போது இந்தக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்டது.
இது சட்டப்பூர்வ சர்ச்சைக்கு வழிவகுத்தது, இறுதியில் நிறுவனம்இதற்கு எதிராக சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் இறுதியில் நிறுவனம் சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.
இது பற்றி கன்டோனல் நீதிமன்றம் தெரிவிக்கையில் இடைவேளைகளுக்கு தெளிவான சட்ட வரையறை இல்லை என்று கூறியது. இதனால் நிறுவனம் இந்த விதியை அமல்படுத்த அனுமதிப்பதாக குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த ஒழுங்குமுறை குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் பாகுபாடு காட்டுவதாக ஒப்புக்கொண்டது.

இதன் விளைவாக, இந்த சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வழக்கறிஞர், கழிப்பறை, உணவு அல்லது ஓய்வு என அனைத்து வகையான இடைவேளைகளும் பதிவு செய்யப்பட வேண்டும், ஏனெனில் கழிப்பறைக்குச் செல்வது வேலையில் இருந்து விடுபடுவதாகக் கருதப்படும் என்று கூறி கொள்கையை ஆதரித்தார்.
அரசாங்க கவுன்சிலர் புளோரன்ஸ் நேட்டர் குறிப்பிடுகையில் இந்த தீர்ப்பு மற்ற நிறுவனங்களுக்கு இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க ஒரு முன்மாதிரியாக அமையும் என கவலை வெளியிட்டுள்ளார்..
Neuchâtel இல் உள்ள மற்ற மூன்று கடிகார நிறுவனங்கள் (Sellita”, “Universo” and “Rubattel and Weyermann”)-செல்லிட்டா, யுனிவர்சோ, மற்றும் ருபாட்டல் மற்றும் வெயர்மேன்-இதேபோன்ற நடைமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் இந்த விஷயத்தில் கருத்துகளை வழங்கவில்லை.
zueritoday