சுவிஸ் எல்லைக்கு அருகே ரைன் பகுதியில் சடலம் கண்டெடுப்பு ஜேர்மன்-சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள ரைன் நதிக்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
புதன்கிழமை மாலை (Baden-Württemberg) வாடன்-வூர்ட்டம்பேர்க்கின் கோப்பிங்கனில் உள்ள (Göppingen) பொலிசாரின் கூற்றுப்படி, குறித்த சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன 15 வயது சிறுமியினுடையதாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, ரைனின் துணை நதியின் கரையில் வால்ட்ஷட் மாவட்டத்தில் மொத்தம் ஆறு பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் குடும்பத்தினரால் மீட்கப்பட்டனர். எனினும் 15 வயதுடைய சிறுமி, மற்றும் 29 வயதுடைய பெண் ஒருவருமே காணாமல் போயுள்ளனர். ஜேர்மன் மற்றும் சுவிஸ் அவசர சேவைகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சடலம் தற்போது கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவளுடைய அடையாளம் இன்னும் உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை, வரும் நாட்களில் தேடுதல் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.