சுவிஸில் உணவு பழக்கவழக்கம் காரணமாக 2.2 மில்லியன் பேர் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் 2.2 மில்லியன் பேர் தொற்றாத (non-communicable) நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்குக் காரணமாக சமநிலையான உணவு பழக்கவழக்கமின்மை கூறப்படுகிறது என்று சுவிட்சர்லாந்து உணவு பாதுகாப்பு அலுவலகம் (OSAV) தெரிவித்துள்ளது.
முறையான உணவு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு (diabetes) போன்ற நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மக்கள் அதிகமாக சாக்லேட்டுகள், உப்பு மிகுந்த சிற்றுண்டிகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் பழங்கள், காய்கறிகள், மற்றும் பருப்புகளை குறைவாக சாப்பிடுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் 15% பேர் அதிக எடையுடன் உள்ளனர். வயதானோரில் 43% பேர் உடல் எடைக்கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். 2050க்குள் சுவிட்சர்லாந்து மக்கள் இறைச்சி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும் எனவும் ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
2.8 மில்லியன் டன் உணவு விரயம் (food waste) ஒவ்வொரு வருடமும் ஏற்படுகிறது, இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டத்திற்காக அரசியல், பொருளாதார அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைக்கின்றன என்பதுடன் இந்த ஆண்டுக்குள் குறித்த செயல்திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.