சுவிஸிலிருந்து தனி நடனப்போட்டியில் மனுஷா உலகசம்பியன் போட்டிக்கு தெரிவு
சுவிஸிலிருந்து தனி நடனப்போட்டியில் மனுஷா என்ற இளம் பெண் உலகசம்பியன் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வருகின்ற ஜீலை மாதம் 80 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இதiயொட்டி கடந்த வாரம் 3 நாட்களாக சொலத்தூனில் நடைபெற்ற தெரிவு போட்டியில் சுமார் 1300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மேற்பிரிவில் 86.7 என்கிற அதியுயர் புள்ளிகளைப்பெற்று மனுஷா மக்களன்பன் 1ம் இடத்தை பிடித்துள்ளார்.
உலக நடன வலையமைப்பு நடாத்திய போட்டியின் உலகசம்பியனுக்குரிய இறுதி போட்டிகள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. குறித்த இந்த நிகழ்வில் மனுஷா கலந்துகொள்ளுவதற்காக முழு தகுதியினையும் தற்போது பெற்றுள்ளார்
.

மனுஷா பரதக்கலையை முறையாக கற்றவர் என்பதோடு சுவிஸ் சூரிச் விமான நிலைய பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றுகிறார். இந்த போட்டியில் எமது கலாசார உடையுடன் பங்கேற்று வெற்றி
வாகை சூடி சுவிட்சர்லாந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது மாத்திரமின்றி இவ்வாண்டு நடைபெற்ற நாட்டியமயில் விருதுக்காக பங்கேற்ற 19 போட்டியாளர்களில் மனுஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு SWISSTAMILTV ஊடகமும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Thankyou :- Selva Kathiravan