சுவிட்சர்லாந்து புதிய சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டையை வெளியிட தீர்மானம்
சுவிட்சர்லாந்தில் 2026 ஆண்டு முடிவில் புதிய பயோமேட்ரிக் அடையாள அட்டை (ID கார்ட்) அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ID கார்டில் சிறிய சிப் ஒன்று பொருத்தப்படும். அந்த சிப் ல் உங்கள் முகம் மற்றும் விரல் தடங்கள் போன்ற தனிப்பட்ட பயோமேட்ரிக் தகவல்கள் சேமிக்கப்படும்.
இது உங்கள் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்$ தொலைவிலிருந்து வாசிக்க முடியாது. ID கார்டு உங்கள் கையில் இருக்கும்போது மட்டுமே அந்த தரவுகளை வாசிக்க முடியும். இந்த புதிய ID கார்ட் போலி ஆவணங்களைத் தடுப்பதற்கும், பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.

தற்போது சுவிஸ் கடவுச்சீட்டில் (Swiss Pass) ஏற்கனவே இந்த சிப் உள்ளது. ஐரோப்பிய யூனியன் 2021ஆம் ஆண்டு முதல் பயோமேட்ரிக் அடையாள அட்டைகள் கட்டாயம் செய்ததால், சுவிஸ் இந்த புதிய ID கார்டை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யாராவது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க விரும்பினால், இந்த புதிய ID கார்ட் அல்லது பயோமேட்ரிக் பாஸ்போர்ட் அவசியமாக தேவைப்படும்.
ஆனால் சுவிஸ் நாட்டுக்குள் மட்டும் அடையாள அட்டையை பயன்படுத்த விரும்புகிறவர்கள், பழைய non-biometric ID கார்டை தொடர்ந்து பெறலாம். 2026க்கு முன் வழங்கப்படும் பழைய ID கார்டுகள் அவற்றின் காலாவதியான தேதி வரை செல்லுபடியாகும். இருப்பினும், வெளிநாடு செல்லும் நபர்கள் புதிய ID கார்டை எடுக்கும்படி சுவிஸ் அரசு பரிந்துரைக்கிறது.