சுவிட்சர்லாந்து செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக குடிவரவுச் சட்டங்களில் தளர்வுகளை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
1999ம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை ஓர் முக்கியமான ஏதுவாக காணப்படுகின்றது.
தொழிலாளர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயும் வெளிநாட்டவர்களை சுவிஸில் பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத வேறும் நாடுகளைச் சேர்ந்த ஆளணி வளம் சுவிட்சர்லாந்தில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளது.
ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இவ்வாறு வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.