சுவிட்சர்லாந்தில், ரயிலில் பயணம் செய்யும் வழக்கமுடையவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. Augest மாதத்தில், பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
வரும் வாரங்களில், மேற்கு சுவிட்சர்லாந்தில், பல்வேறு ரயில் பாதைகளில் கட்டுமானப் பணி நடைபெற இருப்பதால், பல ரயில்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது ரயில் நேரங்களில் காலதாமதம் ஏற்படலாம்.

குறிப்பாக, வாட் மற்றும் வலைஸ் கன்டோனில் மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் ரயில்கள் பல, ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 14ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட உள்ளன.
ஆகவே, பயணிகள் அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.