சுவிட்சர்லாந்தில் போலியான வேலைவாய்பு விளம்பரங்கள் சுவிட்சர்லாந்தில் தகுதிவாய்ந்த தொழிலாளர்களின் நீண்டகால பற்றாக்குறையால், பல சுவிஸ் முதலாளிகள் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் தீவிரமாக உள்ளனர்.
அவர்கள் ஆன்லைனில் காலியாக உள்ள தங்கள் நிறுவன பதவிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு சொந்தமான போலி வேலை விளம்பரங்களை வெளியிட்டு மோசடி கும்பல் தங்கள் கைவரிசைய காட்டிவருகின்றது.
வேலை தேடுபவர்களிடமிருந்து முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக, மோசடி செய்பவர்கள் தங்களை முறையான முதலாளிகளாக காட்டிக்கொண்டு விளம்பரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

‘அனைத்து வேலை வாய்ப்புகளிலும் நான்கில் ஒரு பங்கு போலியானவை’ என சூரிச் ஆட்சேர்ப்பு ஆலோசனையில் உள்ள Kienbaum Executive Search இன் இயக்குனர் Jean-Philippe Spinas தெரிவித்துள்ளார்.
குறிப்பாகஇ மோசடி செய்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பும் நபர்களைப் பற்றிய முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவலைப் பெறுவதற்காகஇ உயர் அதிகாரிகளைப்போன்று நடித்து போலியான வேலை வாய்ப்புகளை வெளியிடுகின்றனர்.
இதனால் ‘உண்மையான மற்றும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வேறுபடுத்துவது கடினமாகி வருவதாகவும் Jean-Philippe Spinas மேலும் குறிப்பிட்டுள்ளார்.