சுவிட்சர்லாந்தில் பாரிய இடி மின்னலுடன் ஆலக்கட்டி மழை சுவிசில் நேற்று மாலை சூறைக்காற்று இடிமின்னலுடன் பெய்த கன மழையினால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சூறைக்காற்று, இடிமின்னலுடன், பெய்த கடும் மழையின் போது, பல இடங்களில் கோல்ப் பந்து அளவில் ஆலங்கட்டிகள் விழுந்தன.
சூரிச், பேர்ன், பாசல் உள்ளிட்ட கன்டோன்களில் இந்த மோசமான காலநிலையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
சுவிட்சர்லாந்து முழுவதும் சுமார் 57,000 மின்னல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று SRF Meteo திங்களன்று அதன் இணையதளத்தில் எழுதியது.

சூரிச் மாகாணத்தில் அதிக மின்னல் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து லூசெர்ன் மற்றும் செயின்ட் கேலன் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக வானிலை சேவையான Meteonews தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்கள் பல இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.