சுவிட்சர்லாந்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உரையாற்றுவது போன்றதொரு காணொளி சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் குழுமங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது.
அண்மைக்காலமாக தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் அவர் புதல்வியான செல்வி துவாரகா போன்றவர்களது சர்ச்சையான பல விடயங்கள் சுவிட்சர்லாந்தில் அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடங்களுக்கு மேலாகவே துவாரகா விரைவில் வரப்போகிறார் என்ற சர்ச்சையான விடயங்கள் தோற்றுவிக்கப்பட்டு, கடந்த மாவீரர் தினத்தில் இணையத்தளம் ஒன்றில் துவாரகா எனப்படும் ஒரு பெண் தோன்றி மாவீரர் தின உரையாற்றியிருந்தார்.
CLICK WATCH VIDEO HERE
எனினும் அந்தப்பெண் போலி எனவும், மேதகு வே.பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் இறுதி சமரில் வீரச்சாவினை தவிழுவிக்கொண்டார்கள் எனவும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
சுவிட்சர்லாந்து மாத்திரம் இன்றி சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்த இந்த துவாரகா விடயம் பல்வேறு சர்ச்சைகளையும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்திருந்தது.

சிலர் இருக்கிறார்கள் எனவும் சிலர் இல்லை எனவும் குழுக்களாக பிரிந்துகிடந்த நிலையில், இறுதியில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் துவாரகா என தோன்றிய பெண் போலியானவர் என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தியினை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
அதன்பின்னர், அண்மையில் சுவிட்சர்லாந்தின் புலிகள் கட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டதாகவும், அதில் ஒருவர் தலைவரை நேரில் சந்திந்தித்து வந்ததாகவும் தகவல்கள் பரபரப்ப்பட்டன.

இதன் அடிப்படையில், இம்முறை மாவீரர் தினத்துக்கு தலைவர் நிச்சயம் வருவார் என குறித்த நபரால் கூறப்பட்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலைகளில் தற்போது தலைவர் வயதான தோற்றத்துடன் பேசும் காணொளி சமூகவலைத்தளத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
எனினும் இந்த காணொளி AI எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது சாதாரன மக்களே புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
அப்படி இருக்கையில், எமது போராட்டத்தையும் மாவீரர்களது கனவையும் சிதைக்கும் முறையில் எதற்காக இவ்வாறான போலிகளும்.. வதந்திகளும் உலா வருகின்றது என்ற கேள்வி இங்குள்ள தமிழர்களின் மனங்களில் நிரம்பிக்கிடக்கின்றது என்பது மட்டுமே தற்போது உண்மையாக உள்ளது.