சுவிட்சர்லாந்தில் சட்ட விரோத கசினோ சூதாட்டம் அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமான கசினோ சூதாட்ட விளையாட்டுக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியில் கசினோ சூதாட்ட நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 2000 சட்டவிரோத இணையவழி கசினோ சூதாட்ட நடவடிக்கைகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கேமிங் சபை இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இவ்வாறு இணையவழியில் அதிக அளவில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட இணைய வழி சூதாட்ட நடவடிக்கைகளை விடவும் பெரும் எண்ணிக்கையிலான சூதாட்டங்கள் இடம்பெறக் கூடும் என அதிகாரிகள் சந்தேகமும் வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து மத்திய அரசாங்கமும் கான்டன் அரசாங்கங்களும் சூதாட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத இணையதளங்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி பட்டியலிடப்பட்டு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகள் காரணமாக ஓராண்டில் மத்திய அரசாங்கம் சுமார் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை இழக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.