சுவிட்சர்லாந்தில் இன்று திங்கட்கிழமை முதல் 18 டிகிரி வெப்பநிலையுடன் மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பமாகியுள்ளது. புதன் தவிர, வாரம் முழுவதும் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த வாரம் பெரும்பாலும் அங்காங்கே மழைபெய்யக்கூடும். கிழக்கு சுவிட்சர்லாந்தில் மட்டும் காலையில் சிறிது மின்னலுடன் வறண்டு இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும், பிற்பகலில் நாடு முழுவதும் மழை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும். அதிகபட்ச வெப்பநிலை 16 முதல் 20 டிகிரி வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செவ்வாய் கிழமை காலையில் வெப்பநிலை சுமார் 11 டிகிரியாகவும், பிற்பகலில் சுமார் 18 டிகிரியாகவும் இருக்கும். ஆனால் சில இடங்களில் சிறுது வெயிலும் சில இடங்களில் சிறிய அழவிளான மழையும் பெய்யக்கூடும். குறிப்பாக பிற்பகலில் மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் புதன் கிழமை வெயிலுடன் கூடிய காலநிலையை எதிர்பாக்கலாம். ஆனால் வியாழக்கிழமை இரவு மழை பெய்யக்கூடும் எனவும் காலநிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.