சுவிட்சர்லாந்தில் அதிக வாடகை உள்ள கன்டோன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட புதிய ஆய்வில் இருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுக் கன்டோனில் அதிக வாடகை உள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. குறித்த கன்டோனில் சராசரி வாடகை சுமார் 1850 பிராங்குகள் என்பதை இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது.
மேலும், சூரிச் இரண்டாவது இடத்தில் உள்ளதுதோடு, அதைத் தொடர்ந்து ஷ்விஸ் கன்டோன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதைத்தொடர்ந்து முறைப்படி வரிசையில், ஜெனீவா, நிட்வால்டன், பாசல், வாட் மற்றும் ஆர்காவ் கன்டோன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.