சுவிட்சர்லாந்தின் பிரபல மீடியா தனது சேவையை இடைநிறுத்துவதாக அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் CH என்கின்ற ஊடகவலையமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கிழக்கு சுவிஸ் செய்தி தளமான FM1Today இளம் வாசகர்களுக்கு பிராந்திய செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகளை வழங்குவதற்காக 2015 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டுகளில், மத்திய சுவிட்சர்லாந்து, ஆர்காவ், சூரிச், பெர்ன் மற்றும் சோலோதர்ன் ஆகிய இடங்களில் கூடுதல் இணையதளங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இப்போது ஆபரேட்டர்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ளமையினால் ஆறு பிராந்திய செய்தி இணையதளங்களும் உடனடியாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

குறித்த இணையதளங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக வாசகர்களைப் பெற்றிருந்தாலும், அதிக போட்டி நிறைந்த ஆன்லைன் சந்தையில் தொடர்ந்து இருப்பதற்கான போதுமான விளம்பர அனுசரணையாளர்களை அவர்களால் பெறமுடியவில்லை.
இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்திக்கொள்வதால் 34 பணியாளர்கள் தங்களது வேலையை இழக்கின்றனர்.. இருப்பினும், CH Media நிறுவனத்தில் 22 ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு சமூகத் திட்டம் உதவும் என குறிப்பிடப்படுகிறது.