சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் கஞ்சா பயன்படுத்த சட்ட ரீதியான அனுமதி சூரிச் கன்டனில் கஞ்சா போதை பொருள் பயன்படுத்துவது சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேசல் கான்டனில் ஏற்கனவே இவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்யவும் நுகர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடுத்த கட்டமாக சூரிச் கான்டனிலும் நிபந்தனை அடிப்படையில் கஞ்சா போதை பொருளை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சூரிச் கன்டனின் 10 மருந்தகங்களில் ஐந்து வகையான கஞ்சா போதை பொருள் வகைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் இது ஓர் பரீட்சார்த்த முயற்சி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரீட்சார்த்த முயற்சியில் இணைந்து கொள்வதற்கு 18 முதல் 80 வயது வரையிலான சுமார் 1200 பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான கஞ்சா போதை பொருள் விற்பனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவதானித்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.