சுவிட்சர்லாந்தின் இன்றைய கன்டோன் செய்திகள் (24/04/24) சொலுத்தூர்ன் கன்டோன் கிரென்சென் பகுதியில் செல்போன் கடையில் திருடமுற்பட்ட ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் 35 வயதான அல்பேனியர் என தெரிவிக்கப்படுகிறது. (source:- Kapo Soluthurn)

நேற்று செவ்வாய்க்கிழம; மதியம் ஒரு மணிக்குப் பிறகு, சென்ட்காலனிலுள்ள வுன்ட்திராசவில் இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. (source:- Kapo St.Gallen)
ஏப்ரல் 12, 2024 வெள்ளிக்கிழமை முதல் இசாகுயர் அசேவாடோ நியுர்கா என்ற 44 பெண்ணை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு 9:40 அளவில் மூரியில் காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (source:- Kapo Argau)
