சுவிசில் இருந்து டயர்களை சட்டவிரோதமாக இத்தாலிக்கு கொண்டு சென்றவர் கைது சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலக அதிகாரிகள் இத்தாலிய உரிமத் தகடு கொண்ட டிரக்கில் 20,000 க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட டயர்களை டெசினோ- ஸ்டாபியே எல்லையை கடக்கும் இடத்தில் கைப்பற்றியுள்ளனர்.
அந்த பொருட்கள் இத்தாலியில் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், எல்லை தாண்டிய போக்குவரத்துக்கு தேவையான அனுமதி ஓட்டுநரிடம் இல்லாததால், எல்லை அதிகாரிகள் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகத்தின் அறிக்கையின்படி, சுற்றுச்சூழலுக்கான பொறுப்பான கூட்டாட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.
இதன்பின்னர் சுற்றுச்சூழலுக்கான பொறுப்பான கூட்டாட்சி அலுவலம் அனைத்து பொருட்களையும் சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.