சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி சென்ட்காலன் கன்டோனில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
சென்ட்காலன் மாகாணத்தைச் சேர்ந்த 53 வயது பெண் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுள்ளதாக 20Min பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 800 பிராங்குகளுக்கு மேல் செலுத்தப்படாத பில்களின் காரணமாக அவரது மின்சாரம் முன்னர் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெறுவதற்காக அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அடுக்குமாடி கட்டிடத்தின் படிக்கட்டு வழியாக கேபிளை இழுத்து அதை அனைத்து குத்தகைதாரர்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவாக அணுகக்கூடிய “சொக்கட்டில்” செருகி மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார்.

இது கையும் களவுமாக பிடிபடி இது தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றில் இடம்பெற்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்ட்காலன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, அந்தப் பெண் தனது சொந்த உபயோகத்திற்காக இரண்டு வாரங்களுக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றுள்ளார்.
திருடப்பட்ட மின்சாரம் இரட்டை இலக்கத் தொகையாக இருக்கும் என போலீஸார் மதிப்பிடுகின்றனர். சட்டத்திற்குப் புறம்பாக தன்னை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவள் இதைச் செய்ததாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெண்ணுக்கு 300 பிராங்குகள் அபராதம் வழங்கப்பட்டுள்ளது . இதை அவளால் செலுத்த முடியாவிட்டால் அல்லது விரும்பவில்லை என்றால்இ அதற்கு பதிலாக அவள் மூன்று நாட்கள் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி 53 வயதான குறித்த பெண் நடமுறைச்செலவாக 550 பிராங்குகளையும் மேலதிகமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த பெண் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.