குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் அக்டோபர் 14, 2024 திங்கட்கிழமை அதிகாலையில், வலைஸ் கன்டோனின் (Visp) விஸ்ப் இல் உள்ள கான்டன்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது, இதன் விளைவாக இரண்டு பேர் இறந்தனர்.
கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவியது, தீயணைப்பு வீரர்கள் விரைவாக அதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் புகை பரவியதால், சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் தற்காலிகமாக ஒரு விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டனர். பல நபர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கட்டிடத்திற்குள் ஒருவர் இறந்து கிடந்தார், அதே நேரத்தில் கடுமையான புகையை சுவாசித்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவரும் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை முறையாக அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது.
தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Kantonspolizei Wallis