கிளாரூஸ் கன்டோனில் நேற்று செவ்வாய்க் கிழமை, (Niederurnen() நீடெருர்னனில் உள்ள ஹாப்ஸ்ட்ராஸ்ஸில் (Hauptstrasse) உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உடைப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிகரெட் விற்பனை இயந்திரம் இருந்த அடுக்குமாடி கட்டிட அடித்தளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த பகுதிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், விற்பனை இயந்திரத்தின் பூட்டை துளையிட்டனர். உள்ளே இருந்த பணப்பெட்டி மற்றும் சிகரெட் இரண்டையும் திருடிச் சென்றனர்.

திருடப்பட்ட பொருட்கள் மற்றும் இயந்திரத்தின் சேதம் உட்பட மொத்த இழப்பு பல நூறு சுவிஸ் பிராங்குகள் ஆகும். இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விவரங்கள் தெரிந்தஎவரும் 055 645 66 66 என்ற எண்ணில் கிளாரஸ் கன்டோனல் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(c) Kanton Polizei Glarus