ஞாயிற்றுக்கிழமை, கன்டோன் கிளாரஸில் இரண்டு விபத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.
ஒரு விபத்தில் 7 வயது சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டது. கிளாசன்பாஸ் சாலையில் லிந்தால்லை (Linthal) நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானார்.

இதன்போது தலையில் குறிப்பிடப்படாத காயங்களுடன் சிறுமி கூர் (Chur) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இரண்டாவது விபத்தில், 31 வயதான சைக்கிள் ஓட்டுநர் மூன்று பேருடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போது கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். அவர் தோள்பட்டையில் காயம் மற்றும் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக அறியமுடிகிறது. குறித்த நபர் கிளாரஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.