கன்டோன் Schwyz இல் பல திருட்டுகளுக்காக இருவர் கைது மெர்லிசாச்சனில் (Merlischachen இல்) உள்ள ஒரு வீட்டின் நுழைவாயிலில் இருந்து செல்போனை திருடிய சந்தேகத்தின் பேரில் 35 வயதான அல்ஜீரியரும் 22 வயதான மொரோக்கோவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சனி முதல் ஞாயிறு வரை இரவு வேளையில் Meggen நகரில் இரண்டு சைக்கிள்களையும், Merlischachen மற்றும் Meggen ஆகிய இடங்களில் உள்ள வாகனங்களில் இருந்து பல்வேறு பொருட்களையும் பணத்தையும் திருடியதாக நம்பப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்கள் இப்போது Schwyz அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் தொடர்பாக தகவல் அளித்த பொதுமக்களுக்கு போலீசார் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்துக்கது..