கன்டோன் கிராவுண்டனில் ஒரு வாரமாக காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 6 ம் திகதி முதல் காணாமல் போன 80 வயதான மூதாட்டி ஒருவரே இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று திங்கட்கிழமை கூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதியில் குறித்த மூதாட்டியின் சடலம் கிடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு எப்படி இடம்பெற்று என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.