ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு வெடிவைத்து தகர்த்த கும்பல் கைது..!! ஜெர்மனியின் Rhineland-Palatinate இல் ஏடிஎம் வெடிப்புக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் 13 சந்தேக நபர்களை பிரெஞ்சு போலீசார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
“Le Parisien” செய்தித்தாள் படி, குற்றவாளிகள் தங்கள் செயல்களின் மூலம் பல லட்சம் யூரோக்களை திருடினர். தெற்கு (Palatinate) பாலாட்டினேட்டில் உள்ள ஹேகன்பாக் (Hagenbach) பகுதியில் உள்ள வோக்ஸ்பேங்க் (Volksbank) கிளையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏடிஎம் வெடித்து சிதறியது.

குற்றவாளிகள் காலையில் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு (Strasbourg) வந்த பிறகு, அவர்கள் ஒரு கேரேஜில் கைது செய்யப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களின் குழுவில் டச்சு, பிரஞ்சு மற்றும் ஒரு ரஷ்ய நபர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணி கோடையில் இருந்து குற்றவியல் போலீசார், மற்றும் புலனாய்வு அதிகாரிகள் முன்னெடுக்கப்பட்டது.
குற்றவாளிகள் ஜேர்மனியில் 10 ற்கும் மேற்பட்ட முறையும், சுவிட்சர்லாந்தில் குறைந்தது ஐந்து முறையும், ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் இல்கிர்ச்-கிராஃபென்ஸ்டாடனில் ஒரு முறையும் ஏடிஎம் இயந்திரங்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. (c) zueritoday