இஸ்ரேலிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதற்கு சுவிட்சர்லாந்து கண்டனம்
காசா பகுதியில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதற்கு சுவிட்சர்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. திங்களன்று X செய்தி சேவையில் மத்திய வெளியுறவுத் துறை மேலும் தெரிவிக்கையில்
காசா பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை சுவிட்சர்லாந்து வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் சுவிட்சர்லாந்து அனைத்து தரப்பினருக்கும் இடையே உடனடி போர்நிறுத்தம் குறித்த உடன்படிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது.
பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிப்பதே சுவிட்சர்லாந்து விரும்புகிறது எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காசா பகுதியின் தெற்கில் உள்ள நிலத்தடி சுரங்கப் பாதையில் இறந்த 6 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டதாக ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த பணய கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
©கீஸ்டோன்/எஸ்டிஏ