இணையத்தில் ரெண்டிங் ஆகும் ஈழ கலைஞர்கள் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ- ஈழ கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட மாபெரும் கலைப்படைப்பான வீரத்தமிழே பாடல் மீண்டும் இணையத்தளங்களில் ரெண்டிங் ஆகி வருகின்றது.
“தமிழே தமிழே ஈழத்தமிழே.. உலகம் முழுதும் வீரத்தமிழே..” என ஆரம்பிக்கும் அழகான அதிரடியான வரிகளோடு கேட்பவர் இதயங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது இந்தப்பாடல்.
இணையத்தில் ரெண்டிங் ஆகும் ஈழ கலைஞர்களின் வீரத்தமிழ் பாடல் வீடியோ
ஈழத்தமிழர்கள் இதயத்தில் மட்டுமல்ல உலகத்தமிழர்களின் இதயங்களில் வீறுகொண்டு ஒலிக்கும் இப்பாடலின் வரிகளுக்கு பிரசாத்தின் இசை இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் கலைஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பலராலும் அறியப்பட்டவரான செல்வா சுக் (SHELVA ZUG) நிறுவனத்தின் தலைவரும் கலைஞருமான செல்வா இப்பாடலுக்காக தனக்கே உரித்த பாணியில் அருமையான வரிகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் ரெண்டிங் ஆகும் ஈழ கலைஞர்களின் வீரத்தமிழ் பாடல் வீடியோ
செல்வா வின் ஒவ்வொரு வரிகளும் நாடி. நரம்புகளில் தமிழை பாய்ச்சுவது போன்றதொரு உணர்வு பாடல் கேட்கும் ஒவ்வொரு தழிழர்க்குள்ளும் உருவாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது.
இன்னும் பல ஈழத்துக்கலைஞர்கள் இந்தப்பாடல் பின்புலத்தில் நின்று தமது உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களில் திறமையும் அயராத உழைப்பும் இப்பாடல் ஒரு தரமான படைப்பாக வெளியில் வருதற்கு சான்றாக அமைந்துள்ளது.
இணையத்தில் ரெண்டிங் ஆகும் ஈழ கலைஞர்களின் வீரத்தமிழ் பாடல் வீடியோ
மேலும் வீரத்தமிழ் பாடலுக்காக உழைத்த அத்தனை கலைஞர்களையும் SwissTamil24.Com இணையம் வாழ்த்துவதோடு மேலும் தரமான படைப்புகளை எம் கண்முன்னே நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் கலையை ரசிக்கும் ஒவ்வொரு தமிழனின் காத்திருப்பாகவே இருக்கிறது.