ஆர்காவ் தாக்குதல் தாரி தொடர்பான வெளியான புதிய தகவல்கள் கடந்த புதன்கிழமை பிற்பகல் ஆர்காவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை ஆர்காவ் மாகாணத்தில் உள்ள போலீசார் வெளியிட்டுள்ளனர். குறித்த தாக்குதல் திட்டமிட்ட தீவிரவாத நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்பானிய நாட்டைச்சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் ஆர்காவ், ஜோபிங்கன் ரயில் நிலையத்தைச் சுற்றியிருந்த மக்களைத் சரமாரியாக கத்தியால் குத்தினார் . அதில் 6 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் வீடு ஒன்றினுள் சென்று ஒளிந்து கொண்ட குறித்த நபர் போலீசார் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டபோது சம்வம் இடம்பெறுவதற்கு முதல் நாள் அவர் ஒரு புகலிட கோரிக்கை விண்ணப்பத்தினை கோரியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அவர் சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகளில் அந்த நபர் ‘உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இது தீவிரவாத தாக்குதல் அல்ல எனவும் நீதிபதி தெரிவித்தார். குறித்த நபரரை தற்போது தடுப்புக்காவலில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.