ஆர்காவ் இல் பயங்கரம் : 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
ஆர்காவ் கன்டோனின் மூல்லிகன் (Mülligen) பகுதியில் உள்ள A3 நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) காலை கடுமையான மோட்டார் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டது. சுமார் காலை 7 மணி அளவில், சூரிச் நோக்கிச் செல்லும் பாதையில் வாகன நெரிசல் காரணமாக வாகனங்கள் நிற்கின்ற சூழலில், வேகமாக வந்த ஒரு Audi கார், நேரில் ஒரு Opel(ஓப்பல்) காரில் மோதியது.
இதன் தாக்கம் காரணமாக அந்த Opel கார் முன் நின்ற மேலும் மூன்று வாகனங்களைத் தள்ளி, அனைத்து ஐந்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதின. இந்த விபத்தில் Audi மற்றும் Opel கார்கள் முற்றிலும் சேதமடைந்தன. மற்ற மூன்று வாகனங்களும் பாரிய சேதத்தை எதிர்கொண்டன. 25 வயதுடைய Audi வாகன ஓட்டுநரும், 32 வயதுடைய Opel வாகன ஓட்டுநரும் சிறு காயங்களுடன் கன்டோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆரம்ப விசாரணை விளைவுகளின்படி, Audi வாகனத்தை ஓட்டியவர் சற்று கவனம் திரும்பிய நிலையில், முன்னிலை வாகனங்களின் நின்ற நிலையை கவனிக்கவில்லை என்பதும், அவர் அதே நேரத்தில் தூக்கமின்மை (overmüdet) காரணமாக தளர்ந்த நிலைக்கு சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்விட்சர்லாந்தில் ஓட்டும் உரிமைக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்து நேரத்தில், பாதையில் இரு வழிகளும் சில நேரம் முழுமையாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. ஆனால், ஆர்காவ் மாநில காவல்துறை மிக விரைவாக செயல்பட்டு ஓவர்டேக்கிங் வழியை (Überholstreifen) மீண்டும் திறந்துவைத்தது.
இந்த விபத்து காரணமாக, சுமார் 8 கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து பின்னடைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், ஓட்டுநர்கள் தங்கள் கவனத்தை சாலைமேல் உறுதியாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, தூக்ககலக்கம் சரியான ஓய்வு இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு, வாகன ஓட்டும் போது செல்போன், அல்லது தனிப்பட்ட சிந்தனைகளால் கவனம் சிதறும் சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும் என்பது காவல்துறை எச்சரிக்கையாக அறிவுறுத்தி உள்ளது.
@Kapo AG