ஃப்ரிபோர்க் மற்றும் பெர்ன் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு சுவிட்சர்லாந்தின் Friborg மற்றும் Bern இடையேயான ரயில் சேவைகள் வியாழன் காலை Düdingen மற்றும் Schmitten FR இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் பெட்டி ஒன்று தடம் புரண்டதே இதற்குக் காரணம் என Rail info செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடு காலை 10 மணி வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.. இன்டர்சிட்டி, இன்டர்ரெஜியோ, பிராந்திய மற்றும் எஸ்-பான் ரயில்கள் இதனால் பாதிக்கப்பட்டன.
இதன்போது பயணிகளுக்கு தாமதம் ஏற்பட்டிருந்ததோடு சில ரயில்கள் ரத்துச்செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.