Zug கன்டோனில் ட்ரக் வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் 38 வயதுடைய ஓட்டுனர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஹூனென்பெர்க்கில் உள்ள மாஷ்வாண்டே தெருவில் இடம்பெற்றுள்ளது.
சாலையை விட்டு விலகிய ட்ரக் வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹூனென்பெர்க் தீயணைப்புத் துறை மற்றும் தனியார் மீட்பு நிறுவனத்துடன் இணைந்து டிரக் மீட்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
Bildquelle: Zuger Polizei
Bildquelle: Zuger Polizei
விபத்து இடம்பெற்ற இடத்தினை சீர் செய்யும் முகமாக சிறிது நேரம் பாதை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுக் கன்டோனல் போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.