ஆர்காவ் மாகாணத்தில் பெண் ஒருவரை பாலியல் வேட்டையாடிய நபர் ஒருவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
கடந்த சனிக்கிழமை ஒக்டோபர் 21, 2023 அன்று ஆர்காவ் மாகாணத்தில் உள்ள Windisch என்ற இடத்தில் பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ தினமான அன்று, மதியம் 1 மணி அளவில் வின்டிஸ்ச்சில் உள்ள Mühlemattstrasse இல் அமைந்துள்ள Brugg Aare விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதாகவும் குறித்த பெண்ணுக்கு உதவி தேவை எனவும் இனந்தெரியாத நபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரோந்துப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 36 வயதுடைய பெண் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார் சற்று நேரத்தின் பின்னர் குறித்த பெண்ணை பாலியல் துஹ்பிரயோகம் செய்த 25 வயதான அல்ஜீரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஆர்காவ் கன்டோனல் போலீசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு குறித்த நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றாவாளி தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருப்பின் ஆர்காவ் கண்டோனல் போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.