உலக அரங்கில் மிகவும் புத்தாக்கம் மிக்க நாடாக சுவிட்சர்லாந்திற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் அமைந்துள்ள உலக புலமைச் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்ட அண்மைய தரவரிசைப் பட்டியலில், சுவிட்சர்லாந்து மீண்டும் உலகின் மிகவும் புத்தாக்கம் மிக்க நாடு என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.
இந்த ஆண்டு வெளியான குளோபல் இனோவேஷன் இன்டெக்ஸ் பட்டியலில், சுவீடன் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முக்கியமாக, சீனா முதல் முறையாக முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த ஆண்டு தென் கொரியா இரண்டு இடங்கள் உயர்ந்து நான்காவது இடத்தையும், சிங்கப்பூர் ஒரு இடம் சரிந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. அறிக்கையில், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி முதலீட்டில் ஏற்பட்ட மந்த நிலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
© tamilnews