சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் கடந்த 2000 ம் ஆண்டு நிறுவப்பட்ட சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் வெள்ளி விழா வெகுவிமர்சியாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, மூன்று ஆண்டுகள் தொடர் செய்முறை, அறிமுறை கற்கை ஆண்டுகளை நிறைவு செய்து பட்டயப் பட்டங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து நாடகத் தயாரிப்புகள், விவரணக் காணொலிகள், ஐரோப்பிய நாடகச் சுற்றுலாக்கள், அனைத்துலக தமிழ் நாடகர் ஒன்று கூடல்கள் போன்ற பல நிகழ்வுகளை வெற்றகரமாக நடாத்தியுள்ளது.
இந்த ஆண்டு சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி தனது 25ஆவது அகவை நிறைவு செய்கிறது. இதனையொட்டி கல்லூரியின் வெள்ளி விழாவிற்கு சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி குழுவினர் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளனர்.

குறித்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக,
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் கால் நூற்றாண்டு நாடக செயற்பாடுகளின் திரட்டுத் தொகுப்பாக ‘பனிமலையில் கூத்தாடிகள்’ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படவுள்ளது. மேலும் மணி விழாவை சிறப்பிக்க இலண்டனிலிருந்து ‘மெய்வெளி’ அரங்க இயக்க இயக்குனர் சாம் பிரதீபன் அவர்கள் பதினைந்துக்கு மேற்பட்ட இளம்கலைஞர்களுடன் ‘கலைத்தேசம்’ என்ற அரங்க ஆற்றுகையை நிகழ்த்த வருகை தருகிறார். இவர்களுடன் ஐரோப்பிய கலைஞர்களும் சுவிஸ் கலைஞர்களும் தமது ஆற்றலை வெளிப்படுத்தி மகிழ்விக்க தயாராக இருக்கிறார்கள்.
இந்தியா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் வேலு சரவணன் அவர்கள் சிறப்புரையாற்ற வருகை தருகிறார். எதிர்வரும் 06.09.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு குறித்த நிகழ்வு பேர்ன் மாகாணத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Adress :- Tell Saal, Bernstr - 72 , 3072 Ostermündigen