சுவிட்சர்லாந்தில் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கரின் நினைவாக விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஜூன் மாதம் 15ம் திகதி இடம்பெறும் குறித்த விளையாட்டுப்போட்டியில் மென்பந்து துடுப்பாட்டம் உதைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் என்பன இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதைப்பந்தாட்ட போட்டிகள் பாசல் மாகாணத்திலும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் பேர்ன் மாகாணத்திலும் இடம்பெறவுள்ளதாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை அறிவித்துள்ளது.

காலை 9 மணிமுதல் இடம்பெறும் இப்போட்டியில் விளையாட்டு கழகங்கள் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவரையும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
தளபதி கேணல் சங்கர் 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.