ஆர்காவ் கன்டோனில் ஏற்பட்ட பயங்கரமான ஒரு சுயவிபத்தில் இளைஞர் ஒருவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு ஓட்டுநர் சாலையி;ல் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதியுள்ளார். இதனால் கார் பலத்த சேதமடைந்துள்ளதோடு வீட்டின் சுவரும் சேதமடைந்துள்ளது. தெய்வாதீனமாக ஓட்டுனர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைஇ காலை 6:30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதான ட்ரைவர் ஓட்டிச்சென்ற ஜாகுவார் காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கோண்டு வந்துள்ளதோடு இளைஞனின் ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியின் ஆதாரம்: ஆர்காவ் போலீஸ்