கன்டோன் ஆர்காவில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.
புதன்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் இது இடம்பெற்றுள்ளது. உழவுஇயந்திரத்தை ஓட்டிச்சென்ற 17 வயது இளைஞன் குடிபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .
Source:- Kantonal Polizei AG
விபத்துக்குப்பின்னர் குறித்த இளைஞன் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது இரத்த மாதிரியை சோதனை செய்தபோதே மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. பின்னர் ஆர்காவ் போலீசாரால் அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.