சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.! சொலுத்தூர்ன் கன்டோனில் ஏ.டி.எம் இயந்திரம் இனந்தெரியாத நபர்களால் திருட்டுப்போயுள்ளமை போலீசாரை திகைக்க வைத்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் :-
சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.!
கடந்த சனிக்கிழமையன்று (7/1/2023) சொலுத்தூர்ன் கன்டோனில் உள்ள, Gunzgen Süd பகுதியில் மோட்டார்வே சர்வீஸ் ஸ்டேஷனின் நுழைவுப் பகுதியில் இருந்த ATM-இயந்திரமே அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஜனவரி 7, 2023, சனிக்கிழமை மாலை 5:15 மணிக்கும் மாலை 5:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலையே மேற்படி ஏ.டி.எம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத சில நபர்கள் திருடிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இத்திருட்டு சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தகவல்கள் அதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க மக்களிடம் கன்டோனல் போலீசார் உதவியினையும் கோரியுள்ளனர். குறித்த தினத்தில் சந்தேகித்துக்கிடானவர்களை யாராவது கண்காணித்திருந்தால் தங்களுக்கு தகவல் தரும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.