சுவிட்சர்லாந்தில் யாசகம் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இருந்து 11 யாசகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசித்த யாசகர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு யாசகர்களை வெளியேற்றுவது குறித்து நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பின் பிரகாரம் சுவிட்ச்லாந்தில் தங்கி இருப்பவர்கள் எவரும் யாசகம் செய்யக்கூடாது. பேசல் நகரில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
https://www.youtube.com/channel/UCFDt04-kWBWbPwT2M17mErw
போலீசார் யாசகர்களை தேடி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் யாசகத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களது மொழியில் குரல் பதிவு ஒன்றை காண்பித்து அவர்கள் இந்த நாட்டில் தங்குவதற்கு அனுமதி அற்றவர்கள் என அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.