Glarus – Näfels பகுதியில் 9 வயது சிறுவனின் காலை பதம் பார்த்த மினி வேன்.!!
புதன்கிழமை, நவம்பர் 16, 2022 , காலை 7:50 மணிக்கு, Näfels ல் உள்ள Aserstrasse ல் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
47 வயதான ஒரு மினிவேன் டிரைவர், கிளாரஸிலிருந்து வந்து, Aserstrasse ஸில் வலதுபுறம் திரும்புவதற்காக Näfels நகருக்கு முன்னால் உள்ள வளைவில் ஓட்டினார். அதே நேரத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் தனது கிக்போர்டைப் பயன்படுத்தி வட்டப்பாதைக்கு அருகாமையில் உள்ள பாதசாரி கடவையில் விரைவாக ஓட்டி கடந்துள்ளான்.

அப்போது மினிவேன் மோதியதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. 9 வயது சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வாகனங்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை Glarus மாநிலப போலீசார் மேற்கொண்டுள்ளார்கள்.