சூரிச் கன்டோன் “எக்லிசாவில்” மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது
சூரிச் மாநில காவல்துறை செப்டம்பர் 17, 2025, புதன்கிழமை அதிகாலை எக்லிசாவில் மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை கைது செய்துள்ளது.
இரவு 3 மணிக்கு பிறகு, சிலர் வாகனங்களை நோட்டமிடுவதாக பல புகார்கள் காவல்துறைக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து ரோந்து குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது, இரண்டு ஆண்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் ஒரு வளைவில் சமநிலை இழந்து விபத்துக்குள்ளானதால் தப்ப முடியாமல் போனது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர், காவல்துறையினர் 34 மற்றும் 24 வயதுடைய அல்ஜீரிய நாட்டு நபர்களை அங்கிருந்தே கைது செய்தனர். அவர்கள் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பிற குற்றங்களில் தொடர்புடையவர்களா என்பதை தற்போது விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் முதலில் மாநில வழக்கறிஞரின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அதன் பின்னர் அவர்கள் சூரிக் மாநில குடிவரவு அலுவலகத்தின் பொறுப்புக்கு ஒப்படைக்கப்படுவார்கள்.
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்குவது மீதான கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில் வாகன திருட்டு மற்றும் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும்.
© Kapo ZH