சூரிக் ஆரம்பப் பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை ரத்து செய்யும் திட்டம்
சூரிக் மாநில ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்படும் பிரெஞ்சு மொழிப் பாடத்தை (French lessons) நீக்க சூரிக் மாநில நாடாளுமன்றம் (Kantonsrat Zürich) தீர்மானித்துள்ளது.
தற்போது, சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் மாநிலங்களில் ஜெர்மன் எவ்வாறு இரண்டாவது மொழியாக கற்பிக்கப்படுகிறதோ, அதேபோல் சூரிக் உட்பட ஜெர்மன் பேசும் மாநிலங்களில் பிரெஞ்சு மொழியும் ஆரம்பப்பள்ளி நிலை (Primarschule) மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வில் பல கட்சிகளின் முன்மொழிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து நிறைவேற்றினர். இதன்படி, 2027க்குள் சூரிக் மாநில அரசு தேவையான சட்ட அடிப்படையை உருவாக்க வேண்டும். அதன் பிறகு பிரெஞ்சு மொழி, ஆரம்பப்பள்ளியில் அல்லாமல் மேல்நிலைப் பள்ளியில் (Sekundarstufe) தொடங்கிக் கற்பிக்கப்படும்.

காரணங்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிலை
முன்மொழிவை ஆதரித்தவர்கள் கூறியதாவது: பிரெஞ்சு மொழியை தாமதமாக கற்றால் கற்றல் தரம் மேம்படும்,
- மாணவர்கள் அதிக ஊக்கத்துடன் மொழியை ஏற்றுக்கொள்வார்கள்,
- ஆரம்பக் கட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் அதிகப்படியான சுமையை தவிர்க்கலாம். என தெரிவித்தார்கள்சுவிட்சர்லாந்தின் நிலை
இது சூரிக்கில் மட்டும் அல்ல; நாட்டின் மொழிக் கொள்கையில் நீண்டகாலமாகவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ஜெர்மன் பேசும் 19 மாநிலங்களில் (Deutschschweizer Kantone) 12 மாநிலங்களில் மட்டுமே பிரெஞ்சு மொழி ஆரம்பப்பள்ளியில் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது.
மேலும், சில மாநிலங்கள் பிரெஞ்சு மொழியை விட ஆங்கிலத்தை முக்கியப்படுத்தும் வழியில் செல்கின்றன. இருப்பினும், சூரிக்கின் தற்போதைய முடிவு ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை, மாறாக மாணவர்களின் கற்றல் சுமையை குறைப்பதே பிரதான நோக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது.
© Keystonesda