சுவிஸில் அதிவேகமாக பயணித்த ஓட்டுனர் : இரு ஆண்டுகள் சிறை தண்டனை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவர், கடுமையான வேகக் குற்றச்சாட்டின் காரணமாக, ஆர்கோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜரானார்.
போர்ஷே என்ற உயர் ஆற்றல் கொண்ட மின்சார காருடன் சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 196 கிமீ வேகத்தில் ஓட்டி பிடிபட்டார். இது நவம்பர் 2023 இல் Holziken (ஹோல்சிகென்) ஆர்காவ் அருகே ஒரு சாலையில் நிகழ்ந்தது.
அங்கு வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ மட்டுமே உள்ளது-அதாவது அவர் சட்ட வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக ஓட்டினார்.
போர்ஷே என்ற அந்த காரின் வேகத்தை சோதித்து பார்க்க விரும்பியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் ஓட்டுனரின் உரிமம் சம்பவ இடத்திலையே பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை தற்போது விசாரித்து நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று ஆண்டுகள் தகுதிகாண் காலமும், 3,000 சுவிஸ் பிராங்குகள் அபராதமும் விதிக்க வழக்கறிஞர் பரிந்துரைத்துள்ளார்.
எனினும் இதுதொடர்பில் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
KAPO AG