சனிக்கிழமை மாலை, இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் லுகார்னோவில் இசை நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியுள்ளார்.
35 ஆண்டுகளாக சினிமா துறையில் கோலூன்றி நிற்கும் ஷாருக்கான் லோகார்னோவில் உள்ள பியாஸ்ஸா கிராண்டே மேடையில் 8,000 பார்வையாளர்கள் முன்னிலையில் கலந்துகொண்டார்.
மேடையில் பேசிய அவர் ஒரு சில இத்தாலிய வார்த்தைகளை கற்றுக்கொண்டு ரசிகர்களுடன் கூச்சலிட்டு தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். மேடையில் அவரைப்பார்த்து ஆராவாரம் செய்த ரசிகர்கள் ‘ஐ லவ் யூ’ என ஷாருக்கானை பார்த்து ஆராவரித்தனர்.

லுகார்னோ ஒரு ‘மிகவும் வெப்பமான நகரம்’ என்று குறிப்பிட்ட ஷாருக்கான், கிட்டத்தட்ட இந்தியாவில் வீட்டில் இருப்பது போலத்தான் இங்கும் இருப்பதாக கூறினார். மேலும். உணவு அருமையாக இருந்ததாகவும் அவர் இத்தாலிய மொழியை இன்னும் சிறப்பாகக் கற்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர் ஷாருக்கான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் பல்வேறு கதாபத்திரங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
அவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு அவருக்கு உலகம் முழுவதும் 3.5 பில்லியன் ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.