பேருந்தின் அவசர பிரேக்கிங்கால் காயமடைந்த 5 பயணிகள் கன்டோன் சுக், Zukerland பகுதியில் பொதுப் போக்குவரத்து பேருந்து ஒன்றை அதன் சாரதி அவசர பிரேக் பயன்படுத்தியமையால் 5 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக சுக் கன்டோனின் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வாகனம் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கு சற்று முன்னர், பேருந்து பாதையில் நுழைந்தது.
படம்: Zug போலீஸ்
இதனால் பேருந்தை சாரதி அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களின் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, 62 வயதான சாரதி சம்பவத்திற்குப் பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.