36 டிகிரி வரை அதிகரிக்கும் சுவிட்சர்லாந்தின் வெப்பநிலை இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் சில இடங்களில் வெப்பநிலை 36 டிகிரி வரை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று செவ்வாய்கிழமை, சுவிட்சர்லாந்தில் வானிலை மிகவும் சூடாக அமையும் எனவும் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் ;இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படிஇ தாழ்வான பகுதிகளில் வெப்பநிலை எல்லா இடங்களிலும் 30 டிகிரியை எட்டும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் இது கோடை வெப்பம் என எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் அதிக வெப்பநிலையை சமமாக பொறுத்துக்கொள்வதில்லை- அதிக வெப்பத்தினால் மன அழுத்தம் மற்றும் இருதய பிரச்சினைகள் நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனீவா ஏரி, லோயர் வலாய்ஸ் மற்றும் தெற்கு டெசினோ ஆகிய பகுதிகளுக்கு மத்திய அரசு வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது . இந்த பகுதிகளில் ஐந்தில் மூன்று ஆபத்து நிலை பொருந்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக வெப்பம் காரணமாக மக்கள் நேரடி சூரிய ஒளியில் இருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் அதிகாரிக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.